×

விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 கனரக வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சோதனையின்போது, விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 கனரக வாகனங்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் திருமுக்கூடல், மாகரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் இருந்து பாரங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை, காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறது.

இந்நிலையில், கூடுதல் பாரம் ஏற்றி செல்வதை கனரக வாகனங்கள் தவிர்க்க வேண்டும் என பலமுறை எச்சரித்த நிலையில், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் – வையாவூர் சாலை பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவ்வழியாக வந்த கனரக வாகனங்களை சோதனை செய்ததில் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் வந்த 2 கனரக வாகனங்களில் வந்த டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், வாகனங்களை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 கனரக வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Geology and Mining Department ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...